தென்மாவட்டங்களில் டிஜிபி லத்திகா சரண் ஆய்வு
நெல்லை: தமிழ்நாடு டிஜிபி லத்திகா சரண் இன்று குமரி, நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக போலீஸ் டிஜிபியாக பொறுப்பேற்ற பின் லத்திகா சரண் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீசாரின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக இன்று (சனி) பகல் 12.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வந்திறங்கினார்.
அங்கிருந்து வல்லநாடு போலீஸ் துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் சென்றார். அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து டிஜிபி ஆய்வு செய்தார்.
பின்னர் கார் மூலம் திருநெல்வேலி வந்தார். அங்கு தென்மண்டல ஐஜி, டிஐஜி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பிக்கள் ராஜேந்திரன்(கன்னியாகுமரி), ஆஸ்ரா கர்க்(நெல்லை), செந்தில்குமார்(தூத்துக்குடி) மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications