இடைத் தேர்தல்களில் கவனம் செலுத்தவில்லை-விஜயகாந்த்
சேலம்: வரும் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியின் பலத்தைக் காட்டுவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில், சேலம் போஸ் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,
அத்தியாவசியப் பொருள்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுநாள் வரையிலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 1998ம் ஆண்டிலேயே நிறைவேற்றுவதாக கூறிக் கொண்டுள்ளனர். அப்போது நிறைவேற்றி இருந்தால் ரூ.400 கோடி மட்டுமே செலவாகியிருக்கும்.
ஆனால் இன்று ரூ.1,300 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2012ல் தான் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு ரூபாய் அரிசி வாங்கச் சென்றால் 10 ரூபாய்க்கு சோப்பு வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கோடிகளைக் கொட்டி வேலை செய்தும் எந்தக் குளத்துக்கும், கிணறுக்கும் தண்ணீர் வரவில்லை.
விலைவாசி உயர்ந்துவிட்டது என்று பிரச்னை எழுந்தபோது ரூ.20க்கு ஹோட்டல்களில் சாப்பாடு விற்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் எந்த ஹோட்டலிலும் ரூ.20க்கு சாப்பாடு கிடைக்கவில்லை.
எனவே, விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் போராட்டம் தொடரும்.
இடைத் தேர்தல்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. பொதுத் தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டுவோம். மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் ரேஷன் கடைகளைக் காட்டிலும் குறைவான விலைக்கு பொருள்கள் கிடைக்கச் செய்வேன்' என்றார்.












Click it and Unblock the Notifications