திமுக பொதுக்குழுவில் எஸ்விசேகர்-2 அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: இன்று நடந்த திமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களில் மைலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களான கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்தக் கூட்டங்கள் நடந்தன.
இக் கூட்டத்தில் சுயேச்சை எம்எல்ஏவாக அறிவிக்கப்பட்டுவிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் கலந்து கொண்டார். அவருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் திமுக பேட்ஜை அணிவித்தார்.
எஸ்.வி.சேகர் வழக்கமாக தேசியக் கொடியை சட்டையில் குத்தியிருப்பார். இந்த கூட்டத்தில் திமுக பேட்ஜ் குத்திக் கொண்டு, முகமெல்லாம் சிரிப்புடன் வலம் வந்தார் சேகர்.
அதிமுக எம்எல்ஏக்கள்:
அதே போல அதிமுக எம்எல்ஏக்களான கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்றனர்.
இருவரின் கட்சிப் பதவிகள் மட்டுமே ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இன்னும் அதிமுக எம்.எல்.ஏக்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்வி சேகர் சுயேச்சை எம்எல்ஏவாக அறிவிக்கப்பட்டுவிட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications