ஜார்ஜ் பெர்னாண்டஸ் திடீர் மாயம்-மனைவி கடத்தினாரா?

26 ஆண்டுகளாகவே தனியே வசித்து வந்த பெர்னாண்டசுக்கு கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஞாபக மறதி நோயும் (Alzheimer's disease) தாக்கியுள்ளது. இதனால் தன்னைச் சுற்றி நடப்பதை அவர் அறியாத நிலையில் உள்ளார்.
இவரது மனைவி லீலா. இவர்களது மகன் சீன். இவர்கள் பெர்னாண்டஸைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர்.
இந் நிலையில் பெர்னாண்டசில் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் லீலாவும், சீன் பெர்னாண்டசும் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.
அதுவரை பெர்னாண்டஸை கவனித்து வந்த அவரது உறவினர்கள், சில உதவியாளர்களை அவர்கள் விரட்டியடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடைசி காலத்தில் பெர்னாண்டசின் ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரிக்கவே அவர்கள் வந்துள்ளதாக புகார் எழுந்தது. ஆனால், பெர்னாண்டசின் நண்பர்களும் உறவினர்களும் தான் சொத்தை கைப்பற்ற முயல்வதாக லீலா புகார் கூறி வந்தார். மேலும் அவர்கள் தனது கணவரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் பெர்னாண்டஸ் திடீரென மாயமாகியுள்ளார். அவரது டெல்லி வீடு பூட்டிக் கிடக்கிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பெர்னாண்டசின் சகோதரர் மைக்கேல் கூறுகையில், நாங்கள் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்தோம். அதற்குள் அவரது மனைவி லீலா அவரை எங்கேயோ கடத்திச் சென்று விட்டார். இதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர உள்ளோம். எங்களுக்கு அவரது சொத்து எல்லாம தேவையில்லை. அவருக்கு நல்ல சிகிச்சை கிடைத்தால் போதும். அவரை சந்திக்க அனுமதித்தால் போதும் என்றார்.












Click it and Unblock the Notifications