ஜெ. வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
பெங்களூர்: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யுமாறு தொடரப்பட்ட வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.
இவ்வழக்கு மீதான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கேசவநாராயணா முன்னிலையில் நடந்துவந்தது.
நேற்று வழக்கு விசாரணை நடந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் நாகேஷ்வரராவ், நவநீதகிருஷ்ணன் ஆகியோர்,
'லண்டன் ஓட்டல் வழக்கு போல சொத்து குவிப்பு வழக்கும் பொய்யானது. ஆகவே இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினர்.
அரசு வக்கீல் ஆச்சார்யா சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் விசாரணை முடிந்ததாகவும், தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications