மாவோயிஸ்ட் விவகாரம்: 3 மாநில முதல்வர்களுக்கு சிதம்பரம் கடிதம்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கணட் முதல்வர் சிபுசோரன் மற்றும் மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஆகியோருக்கு இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்ட் அட்டகாதத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசு ஒரு முடிவான கருத்துக்கு வந்துள்ளதாகவும், அந்த முடிவை அமல்படுத்துவதற்கு மாநில முதல்வர்களின் ஆலோசனையும், ஒப்புதலும் தேவை என அமைச்சர் சிதம்பரம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செயல்திறன்-தனக்குத் தானே பூஜ்ஜியம்:
இந் நிலையில் உள்துறை அமைச்சராக தனது செயல் திறனுக்கு பூஜ்ஜியத்துக்கு நிகராகவே மதிப்பெண் வழங்கியுள்ளார் ப. சிதம்பரம்.
நிருபர்களிடம் பேசிய அவரிடம் உள்துறை அமைச்சராக உங்கள் செயல் திறமைக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, பூஜ்ஜியத்துக்கு மிக அருகிலேயே எனது மதிப்பெண் உள்ளது என்று சிதம்பரம் பதிலளித்தார். இவ்வளவு குறைவாக மதிப்பிட்டுள்ளதற்கு காரணம் என்ன என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
மத்திய அரசில் உங்கள் பங்களிப்பு மிகப் பெரியதாக உள்ளதே என்று நிருபர்கள் கூறியதை மறுத்த சிதம்பரம், அரசில் எனது பங்கு மிகச் சிறியது என்றார்.












Click it and Unblock the Notifications