அந்தமான் விமானத்தில் 8 மணி நேரம் தவித்த பயணிகள்!
சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம், அந்தமானில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. இதனால் சுமார் 8 மணி நேரம் பயணிகள் விமானத்திலேயே தவித்துக் கொண்டிருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று காலை 4.10 மணிக்கு 172 பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்றது.
அந்தமானுக்கு காலை 7 மணிக்கு விமானம் சென்றபோது ஆங்கு கடுமையான பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியவில்லை.
அதனால் அந்த விமானம் 10 மணிக்கு சென்னைக்கு திரும்பி வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் தரையிறக்கப்படவில்லை. அந்தமானில் வானிலை சீரானதும் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 11.45 மணி வரை விமானம் புறப்பட்டு செல்லாததால் பயணிகள் ஆத்திரமடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து பகல் 12.10 மணிக்கு பயணிகளுடன் அந்தமானுக்கு புறபட்டு சென்றது.
இதற்கிடையே காலை 10.10 மணிக்கு அந்தமானுக்கு செல்ல 128 பயணிகள் இன்னொரு விமானத்திற்கு வந்து சோதனைகளை முடித்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால் பகல் 12 மணி வரை விமானத்தில் ஏற்றப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் கோஷம் போட்டனர். விமான நிறுவன அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர்.
பின்னர் அந்தமானில் வானிலை சீராக இல்லாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக கூறினார்கள். இதன் பின்னர் பயணிகள் சிலர் பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டனர். சிலர் வேறு தேதிகளில் செல்லவதாக கூறிவிட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications