சந்திரசேகர ராவ், விஜயசாந்தியின் எம்.பி பதவி ராஜினாமா கடிதங்கள் நிராகரிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா கோரிக்கைக்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்கள் சந்திரசேகர ராவ், விஜயசாந்தி ஆகியோர் அனுப்பிய ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லாததால் அவற்றை நிராகரித்து விட்டதாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
மகபூப் நகர் எம்.பி. சந்திரேசகர ராவ், மேடக் தொகுதியின் எம்.பி. விஜயசாந்தி. இருவரும் தெலுங்கானா போராட்டக் குழுவின் முடிவுக்கேற்ப தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்து லோக்சபா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர்.
ஆனால் இந்தக் கடிதம் முறையாக இல்லை என்று கூறி இரண்டையும் ஏற்க முடியாது என்று மீரா குமார் கூறி விட்டார்.
நிராகரிக்கப்பட்ட ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அலுவலகம், ராவுக்கும், விஜயசாந்திக்கும் அனுப்பி வைத்துள்ளது.
டிசம்பர் 23ம் தேதியன்றே இருவரும் ராஜினாமாக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளப் போவதாகவும் அது முடிந்தவுடன் ஒட்டுமொத்தமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பிக்கள் அனைவரும் முறையான ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்கப் போவதாகவும் அக்கட்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications