புனே ஜெர்மன் பேக்கரியால் வருவாயை இழந்த டெல்லி ஜெர்மன் பேக்கரி
டெல்லி: புனே நகரில் உள்ள் ஜெர்மன் பேக்கரியில் கடந்த வாரம் நிகழந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, டெல்லியில் அதே பேரில் இயங்கிவரும் பேக்கரிக்கு கூட்டம் குறைந்து வருமானம் பறிபோயுள்ளதாம்.
டெல்லி பாகர்கஞ்ச் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக பரபரப்பாக இயங்கி வருகிறது ஜெர்மன் பேக்கரி. எப்போது வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சூழ காட்சியளிக்கும்.
இதே பெயரில் புனேயில் இயங்கிவந்த ஜெர்மன் பேக்கரியில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின் டெல்லியில் உள்ள ஜெர்மன் பேக்கரிக்கு கூட்டம் வர தயங்குகிறது.
கடந்த ஒருவாரத்தில் பேக்கரியில் வியாபாரம் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மும்பை குண்டுவெடிப்பு சதியில் தொடர்புடைய டேவிட் கோல்மென் ஹெட்லி இந்தியா வந்திருந்த போது தங்கியதாக கூறப்படும் சாபாப் ஹவுஸ் விடுதி, இந்த இரண்டு நகரங்களிலும் ஜெர்மன் பேக்கரி அருகில் தான் அமைந்துள்ளது.
தீவிரவாத தாக்குதல் ஏதும் நடக்காமலேயே, தகுந்த காரணமே இல்லாமல், வெறும் பெயருக்காக 20 சதவீத வருமான இழப்பை சந்திக்கிறோம் என்று டெல்லி அஜய் கஃபே ஜெர்மன் பேக்கரி உரிமையாளர் அஜய் அகர்வால் வருத்தத்துடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications