புனே குண்டுவெடிப்பு - மேலும் 2 பேர் உயிரிழந்தனர்
Subscribe to Oneindia Tamil
புனே: புனே குண்டுவெடிப்பில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
கடந்த வாரம் புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இதில் அன்றைய தினம் 9 பேர் இறந்தனர். அதன் பின்னர் மேலும் 4 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் 2 இளம் மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புனேவைச் சேர்ந்த விகாஸ் துல்சியானி என்ற 24 வயது மாணவர் உயிரிழந்தார்.
அதேபோல ராஜீவ் அகர்வால் என்கிற 23 வயது மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சை பெற்று வரும் மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
--












Click it and Unblock the Notifications