போர்ச்சுகல் தீவில் கடும் புயல் மழை- 32 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லிஸ்பான்: போர்ச்சுகல் நாட்டில் உள்ள மெடீரா என்ற தீவில் கடும் புயலுடன் வீசிய கன மழைக்கு 32 பேர் பலியானார்கள்.
மத்திய அட்லான்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, மக்கள்தொகை குறைவான மெடீராவில் கடந்த சில தினங்களாக கடும் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புயல் மழையில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்ததாகவும், 68 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மெடீரா துணை அதிபர் ஜாவோ சுன்ஹா இ சில்வா தெரிவித்துள்ளார்.
புயல் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தீவு முழுக்க அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து உதவியும் கோரப்பட்டுள்ளது.
பேரழிவில் சிக்கியவர்களை காபாற்றவும், பல்வேறு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் கடற்படையினர் ஹெலிகாப்டர்களுடன் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications