பொனசேகா, ரணில் கொழும்பில் போட்டி?

இருப்பினும், இந்த இருவரும் தனித் தனியான கட்சிகள் சார்பில் தனித் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டார் பொன்சேகா என்பது நினைவிருக்கலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் ரணிலும், தேசிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக் கோப்பை சின்னத்தில் பொன்சேகாவும் களமிறங்க உள்ளதாக திவயின என்ற சிங்கள ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்குமாறு பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சி கேட்டுக் கொண்டது.
சிறையில் இருக்கும் அவர் தேர்தலில் போட்டியிட்டால் மக்களின் அனுதாபத்தைப் பெற முடியும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை எதிர்த்து கூட்டாக களம் காணவும் இலங்கை எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலர் திசா அத்தநாயக கூறுகையில், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா இந்த தேர்தலிலும் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன் எங்கள் கூட்டணித் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தனர். இது குறித்து முடிவெடுக்க சிறிது கால அவகாசம் தருமாறு பொன்சேகா கேட்டுக் கொண்டார்.
இப்போது சிறையில் உள்ள பொன்சேகாவுக்கு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்குமாறு அவரது வழக்கறிஞர் மூலம் தகவல் அனுப்பினோம். ஆனால் அவரிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. அவர் எடுக்கும் முடிவை வைத்துதான் எதிர்க்கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
ஆனால் தற்போது ரணிலும், பொன்சேகாவும் தனித் தனி கட்சிகள் சார்பில் போட்டியிடுவதாக புதுச் செய்தி வந்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலைப் போலவே ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் மட்டுமே ராஜபக்சேவுக்கு தோல்வியைக் கொடுக்க முடியும் என்ற கருத்து பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மத்தியில் நிலவினாலும், அதில் ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications