சென்னையில் பாமக வக்கீல் படுகொலை- 3 பேர் சரண்
சென்னை: சென்னையில் இன்று காலை வழக்கறிஞர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
சென்னை அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வன்னிய சம்பத். 49 வயதான இவர் பாமகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார். எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றி வந்தார்.
இன்று காலை தனது மகன் சஞ்சீவை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அயனாவரம் சவுத் ஈஸ்ட் காலனி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது அவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளியது.
படுகாயமடைந்து விழுந்த சம்பத்தை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில், பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
3 பேர் சரண்
தனது மகன் கண் முன்பாக பாமக வக்கீல் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை திருவள்ளூர் கோர்ட்டில், கொலையாளிகள் கார்த்திக், சதீஷ்குமார், மதன் ஆகியோர் சரணடைந்தனர்.
இவர்களை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் கொலைக்கான காரணம் தெரிய வரும்.
வக்கீல்கள் போராட்ட அறிவிப்பு
இதற்கிடையே, பாமக வக்கீல் சம்பத் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வக்கீல்கள் சங்கத் தலைவர்களான பிரபாகரன், பால் கனகராஜ், கே.பாலு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளைப் போலீஸார் கைது செய்யாவிட்டால் நாளை போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications