அலகாபாத்: பள்ளி அருகே குண்டு வெடித்து 5 குழந்தைகள் காயம்
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தில் கௌஷாம்பி நகரில் உள்ள பள்ளி அருகே குண்டு வெடித்ததில் ஐந்து குழந்தைகள் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே கௌஷாம்பி நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன.
பள்ளி இடைவேளையின் போது, சில குழந்தைகள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள கட்டித்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து குழந்தைகள் காயமடைந்தனர்.
காயமடைந்த குழந்தைகள் அலகாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் பின்னணியில் தீவிரவாத சதி திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications