பிரபல நிறுவன குளிர்பானத்தில் பல்லியின் சிதைந்த உடல்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:​​ ஒன்றரை லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரபல நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலில் இறந்த பல்லி கிடந்ததாக தூத்துக்குடி நகர நுகர்வோர் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனித ​ உரிமைகள் கழகத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

மனித உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் டி.ஜே.​ கார்த்திகேயன்,​​ மாவட்டச் ​ செயலர் என்.​ சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் பிரபலமான நிறுவனத்தின் குளிர்பான ​ பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.​ அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.​ ரவிச்சந்திரனை சந்தித்து அளித்த புகார் மனு விவரம்:

எங்களது அமைப்பின் உறுப்பினரான தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1-வது தெருவைச் ​ சேர்ந்த பி.​ ராஜாராம்,​​ 4.1.2010 அன்று ஒன்றரை லிட்டர் கொள்ளவு கொண்ட 2 ​ குளிர்பான பாட்டில்களை வாங்கினார்.​ அந்த பாட்டில்களில் 14.12.2009-ல் தயார் ​ செய்யப்பட்டவை எனவும்,​​ பேட்ச் நம்பர் 247 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் ஒரு பாட்டிலின் சீலை உடைத்து,​​ விருந்தாளிகளுக்கு அளித்து தானும் குடித்துள்ளார்.​ அப்போது அந்த பாட்டிலில் தூசி படிந்திருப்பதையும்,​​ சுவை மற்றும் மணம் வேறு மாதிரி இருப்பதையும் அவர் உணர்ந்தார்.​ உடனே உடைக்கப்படாத மற்றொரு பாட்டிலை பார்த்தபோது ஏதோ அழுக்கு மிதப்பதைக் கவனித்தார்.

அது இறந்துபோன பல்லியின் சிதைந்த உடல் என்பது தெரியவந்தது.​ பல்லியின் ​ கால்கள் அந்த பாட்டிலில் மிதப்பதை தெளிவாக காண முடிந்தது.​ உடனே அந்த பாட்டிலை ராஜாராம் உடைக்காமல் வைத்துவிட்டார்.​

பொதுமக்கள் அதிகமாக பருகும் குளிர்பானத்தை நல்ல முறையில் எவ்வித கேடும் ​ விளைவிக்காத வகையில் தயார் செய்வது அந்த நிறுவனத்தின் கடமையாகும்.​ ஆனால்​ அந்த நிறுவனம் கடமையில் இருந்து தவறி,​​ நுகர்வோருக்கு ஆபத்து விளைவிக்கும் ​வகையில் தரம் குறைந்த குளிர்பானத்தை விநியோகம் செய்துள்ளனர்.​ தரம் குறைந்த குளிர்பானத்தைப் பருகுவதால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட கூடிய ​அபாயம் உள்ளது.

எனவே,​​ தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்பனை ​ செய்யப்படுவதைத் தடை செய்ய வேண்டும், என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+