ஈழத்தில் அடுத்த கட்ட போராட்டமும் ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் - காசி ஆனந்தன்
புதுக்கோட்டை: ஈழத்தில் அடுத்து ஏதாவது போராட்டம் வெடித்தால் அது நிச்சயம் ஆயுதப் போராட்டமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.
தமிழர் மீட்சிப்படையின் முத்துக்குமாருக்கும், புதுக்கோட்டை தி.க. முன்னாள் மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து மகள் மாதரசிக்கும் புதுக்கோட்டையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதில்,கொளத்தூர் மணி, சீமான், நெடுஞ்செழியன், காசி.ஆனந்தன் முன்னிலை வகுத்தனர்.
அப்போது காசி ஆனந்தன் பேசுகையில்,
75 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஈழம் இன்று 15 கிலோ மீட்டராக சுருங்கிவிட்டது. ஈழ மண் பறிபோனது. தமிழ் ஈழத்தில் மண்ணை இழந்து விட்டோம். அந்த மண்ணை இழந்தாலும் விட மாட்டோம்.
மீண்டும் ஆயுதப் போர் தொடங்கும், இது வரை ஈழம் மூன்று கட்ட போர்களை சந்தித்திருக்கிறது. முதற்கட்ட போர் பேச்சு வார்த்தை, இரண்டாம் கட்ட போர் அறப் போராட்டம், மூன்றாம் கட்ட போர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம். நான்காவது போரும் ஆயூதப் போராட்டமாக அமையலாம்.
ஆயுதப்போராட்டம்தான் எங்கள் தீர்வு. போர்க்குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். எனவே போராட்டம் தொடரும் என்றார் காசி ஆனந்தன்.












Click it and Unblock the Notifications