சட்டசபை விடுதியில் மாஜி திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் சண்டை- வேட்டி, சட்டை கிழிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை உறுப்பினர் விடுதியில் திமுக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் சண்டை மூண்டது. இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் அடித்துத் தாக்கிக் கொண்டனர். இதில் வேட்டி, சட்டை கிழிந்தது.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகனும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணமும், சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நட்பான முறையில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புதிய சட்டசபை வளாகம் குறித்து அன்பழகன் பேசியுள்ளார்.

இதற்கு கல்யாணம் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. சரமாரியாக வாய் வாதம் செய்தனர். இது பின்னர் கைகலப்பாக மாறியது. இருவரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதில் இருவருக்கும் வேட்டி, சட்டை கிழிந்து தொங்கியது.

சண்டை முடிந்த பின்னர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம், அரசினர் தோட்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+