சேமிப்புக்கு மாறும் யுஎஸ் தொழிலாளர்கள்... பெரும் நஷ்டத்தில் சிற்றுண்டி உணவகங்கள்!

அமெரிக்காவில் பெரும்பாலான பணியாளர்கள், ஏன் குடும்பங்களே கூட சிற்றுண்டி நிறுவனங்களைத்தான் நம்பியிருந்தன, 2008 வரை. ஆனால் ஒரே ஆண்டில் நிலைமை தலைகீழாகிவிட்டுள்ளதாம்.
யுஎஸ் சிற்றுண்டி நிறுவனங்கள் ஏதோ நம்ம ஊர் 'டிபன் சென்டர்' மாதிரி சமாச்சாரமில்லை. நிறைய முதல் போட்டு ஏராளமான கிளைகளுடன் இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகள்.
பர்ஜர் கிங், வெண்டி, ஹாட் ஃபூட்ஸ், செவன் டு லெவன், மெக்டொனால்டு என எல்லாமே பெரிய நிறுவனங்கள் என்பதால் இவற்றின் நஷ்டம் எளிதில் வெளியில் வந்துவிடுகிறது.
தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது அமெரிக்காவின் காலைச் சிற்றுண்டி விற்பனை மட்டும் 5,700 கோடி டாலர்கள். அதாவது சுமார் 2,62,300 கோடி ரூபாய்கள்.
முதல் நாள் வேலை முடிந்து, மாலையில் கிளப்புகள், பப்கள் சென்றுவிட்டு, காலையில் தாமதமாக படுக்கையைவிட்டு எழுந்து வேலைக்குச் செல்வோரின் ஒரே சாய்ஸ் இந்த ரெடி ஃபுட் கடைகள்தான்.
போகிற வேகத்தில் சாப்பிட்டுச் செல்வார்கள் தொழிலாளர்கள். இந்த சிற்றுண்டிக்குதான் 2,62,000 கோடி ரூபாய்கள்!
26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிற்சாலைகளில் மந்த நிலையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகியதால் இந்த காலைநேரக் கடைகளுக்குக் கூட்டம் வருவதே குறைந்துவிட்டது. இப்போது மிகவும் மலிவான சிற்றுண்டிகளை காம்போ பேக்காக சேர்த்து கொடுக்கின்றனர். அத்துடன் சில இலவசங்களும்கூட உண்டு. காபி கூட தருகிறார்களாம். அப்படியும் இந்த காலைச் சிற்றுண்டி நிலையங்களுக்குள் வருவதற்கே தொழிலாளர்கள் தயங்குகின்றனராம். பர்ஸ் காலியாக இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
வேலையில்லா திண்டாட்டம் 10 சதவிகிதமாக இருந்தபோது காலைச் சிற்றுண்டி கடைகளில் 4 சதவிகிதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
மெக்டொனால்டு நிறுவனம் மட்டுமே 14,000 கிளைகளை நடத்துகிறது. அங்கெல்லாம் விற்பனை வெகுவாகக் குறைந்துவருகிறது.
இப்போது தொழில்துறையில் மீட்சி ஏற்பட்டு வரும் நிலையில் மதிய உணவு, இரவு உணவுக்கு தேவை அதிகரித்து வந்தாலும் காலை உணவின் தேவை அதிகரிக்கவேயில்லை என்கிறது பர்கர் கிங் நிர்வாகம்.
இருக்கிற வேலை நிரந்தரமா இல்லையா என்று தெரியாத நிலை உள்ளதால், காலை நேர சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கையிலுள்ள காசை மிச்சம் பிடிக்கப் பார்ப்போம் என்று, சேமிப்பு பழக்கத்துக்கு மாறி வருகிறார்களாம் அமெரிக்கர்கள்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சமீபத்திய சர்வேயின்படி தொழிலாளர்களில் 50 சதவீதத்தினர் பணத்தை மிச்சம் பிடிப்பதுதான் இதுபோன்ற பொருளாதார நெருக்கடியின்போது உதவும் என்று கருத்து தெரிவித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.












Click it and Unblock the Notifications