சென்னை: ஒரே இரவில் 8 கடைகள், 2 கோயில்களில் கைவரிசை: மர்மக் கும்பலுக்கு வலை!
சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில ஒரே இரவில் அடுத்தடுத்த தெருக்களில் உள்ள கோயில்கள் மற்றும் கடைகளை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
வில்லிவாக்கம் சிட்கோ நகர் 3வது மெயின் ரோட்டில் பழமை வாய்ந்த சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது.
நேற்று இரவு கொள்ளையர்கள் இந்த கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உண்டியல், மரபீரோவை உடைத்துள்ளனர்.
உண்டியலில் இருந்த ரூ.2,500 பணம், மர பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி சடாரி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
பின்னர் அருகே இருந்த ஜனார்த்தனன் என்பவரது ஸ்டூடியோ கடை, பழைய இரும்புக்கடை, டெய்லர் கடை ஆகியவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.
அதை தொடர்ந்து ரவிக்குமார் என்பவரது எலெக்டரிக் கடையில் இருந்து ரூ.2,300 பணத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் 2வது மெயின் ரோட்டில் கணேசன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு சென்று உள்ளனர். அவர்களால் கடை ஷட்டரை உடைக்க முடியவில்லை.
பின்னர் 53வது தெருவில் இருக்கும் பியூட்டி பார்லர், டெய்லர் கடை ஆகியவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.
ஹோட்டல் நடத்தும் மகேஸ்வரி என்பவரது கடையில் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர்.
அதை தொடர்ந்து 47வது தெருவில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கு 3 உண்டியல் இருக்கிறது. அம்மன் சன்னதி அருகே இருந்த ஒரு உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி எடுத்துச்சென்றனர்.
இரவு 11 மணி முதல் அதிகாலை வரை கொள்ளையர்கள் அந்த பகுதியில் கைவரிசை காட்டி உள்ளனர். வில்லிவாக்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications