நாடாளுமன்றம் முன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி இளைஞர், நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தீக்குளிக்க முயன்றார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ரஸ்டம் என்ற அந்த இளைஞர் இன்று மதியம் சுமார் 1.15 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள விஜய்சவுக் பகுதியில் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார்.
திடீரென்று தன் உடலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, ஒரு கையில் எண்ணெய் கேனையும், மற்றொரு கையில் தீக்குச்சியையும் பிடித்தபடி நின்றார்.
தனது கைப்பகுதியில் தீயையும் வைத்துக்கொண்டார். அப்போது போலீசார் மற்றும் அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்து, அந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மும்பை தாதர் ரயில் நிலையத்தை பிஆர் அம்பேத்கர் ரயில் நிலையம் என பெயர் மாற்றக்கோரி இந்த தீக்குளிப்பு முயற்சியில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications