நாளை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்
சென்னை: விழுப்புரம் அருகே ஒட்டக்கோவில்-அரியலூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 2 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு நாளை (24ம் தேதி) பகல் 12.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம் செய்யப்பட்டு, மதியம் 2 மணிக்கு இயக்கப்படும்.
அதே போல குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு இன்று இரவு 8.50 மணிக்கு கிளம்ப வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10 மணிக்கு கிளம்பும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் இந்த ரயில் நாளை காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைய ஒன்றரை மணி நேரம் கால தாமதம் ஆகும்.
திருச்சியிலிருந்து கடலூர் துறைமுகத்துக்கு நாளை (24ம் தேதி) மாலை 3.05 மணிக்கு இயக்கப்பட வேண்டிய பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும். மேலும் இந்த ரயில் விருத்தாச்சலம்-கடலூர் துறைமுகம் ரயில் நிலையம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து விருத்தாசலத்திற்கு நாளை (24ம் தேதி) இயக்கப்பட வேண்டிய பாசஞ்சர் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications