டெல்லி-வாஷிங்டன்: தினசரி சேவைகளை துவக்க ஏர்இந்தியா திட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய நகரங்களில் இருந்து மிலன் வழியாக வாஷிங்டனுக்கு தினசரி விமான சேவையை விரைவில் துவக்க இருப்பதாக ஏர்இந்தியா அறிவித்துள்ளது.

டெல்லி-நியூயார்க்-வாஷிங்டன் இடையிலான புதிய விமான சேவையை ஏர்இந்தியா கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

இதற்கு பயணிகள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பை அடுத்து மிலன் வழியாக டெல்லி மற்றும் கோல்கத்தா நகரில் இருந்து வாஷிங்டனுக்கு தினசரி போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள ஏர்இந்திய இயக்கக தலைவர் எஸ்.கோலே கூறுகையில், 'இந்தியாவுக்கு மிலன் வழியாக தினசரி சேவைகளை வழங்குவதற்கு தேவையான ஒப்புதல்கள் பெற்றாகி விட்டது.

கூடிய விரைவில் இந்த போக்குவரத்து தொடங்கப்படும். ஐரோப்பிய பயணிகளை கவருவதற்காக மிலன் நகரை இடைநிற்கும் நிலையமாக தேர்வு செய்தோம்.

புதிய விமானத்தின் நேரம் மற்றும் இதர முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த தினசரி போக்குவரத்து ஆரம்பித்த பின்னர், தற்போது வாஷிங்டன், நியூயார்க் வரும் ஏர்இந்தியா விமான சேவை நிறுத்தப்படும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+