5 மணிக்கு பேசுங்க- ப.சிக்கு நம்பர் கொடுத்த மாவோயிஸ்டுகள்!

நேற்று ப.சிதம்பரம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஒரு பேக்ஸ் எண்ணைக் கொடுத்து, நாங்கள் வன்முறையைக் கைவிட்டு விட்டோம் என்ற ஒரு அறிக்கையை எனக்கு அனுப்பி வையுங்கள். அதில் எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்கக் கூடாது. அதை அனுப்பினால் நான் பிரதமருடன் பேசி ஆவண செய்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு மாவோயிஸ்டுகள் அதே பாணியில் ஒரு பதிலை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் ப.சிதம்பரத்திற்கு விடுத்துள்ள செய்தியில், ஒரு மொபைல் எண்ணைக் கொடுத்துள்ளனர். மேலும், இந்த எண்ணில் வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்குத் தொடர்பு கொண்டால் எங்களது செய்தித் தொடர்பாளர் கிஷன்ஜி அதில் கிடைப்பார். அவருடன் நீங்கள் பேசவும் என்று கூறியுள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் இந்த பதிலுக்கு உள்துறை அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.
சொல்ல முடியாது, ஒரு வேளை ப.சிதம்பரம், மாவோயிஸ்டுகள் கொடுத்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினாலும் பேசலாம்.












Click it and Unblock the Notifications