சபரிமலைக்கு லாரியில் வரக்கூடாது: கேரள ஐகோர்ட்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பக்தர்கள் லாரிகளில் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சபரி்மலையில் கடந்த சீசனில் ஆந்திராவில் இருந்து பக்தர்களை ஏற்றி வந்த லாரி ஒன்று எரிமேலி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் பூபதியை போலீசார் கைது செய்தனர். அவர் தன்னை ஜாமீனி்ல் விடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி பூபதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதைத்தொடர்ந்து நீதிபதி தனது தீர்ப்பில்,
'பிற மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் லாரியில் வருவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதை மீறி பக்தர்கள் லாரியில் வந்தால் அவர்களை தடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை தேவை' என்றார்.












Click it and Unblock the Notifications