இந்திய டீ.. அதிகம் கேட்கும் துபாய்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ​இந்திய தேயிலையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுள் ஒன்றாக மாறியுள்ளது துபாய்.

சமீபத்திய வர்த்தகத் துறை புள்ளிவிவரத்தின்படி இந்தியாவிலிருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இது குறித்து துபாய் தேயிலை வணிக நிறுவனம் மேலும் கூறியிருப்பது:

துபாய் மக்கள் அதிகம் விரும்பும் தேயிலையில் இலங்கைக்கு அடுத்தபடியாக இந்திய தேயிலை உள்ளது.​ ​

இலங்கை, ​​ இந்தியா,​​ கென்யா ஆகிய நாடுகளில் இருந்துதான் துபாய்க்கு அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யப்படுகிறது.​ மொத்த இறக்குமதியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது.

எங்கள் நிறுவனம் மூலம் சாதனை அளவாக 2009-ம் ஆண்டில் 75 லட்சம் கிலோ தேயிலையை விற்பனை செய்துள்ளோம்.​ இந்திய தேயிலை ஒரு கிலோ சுமார் ரூ.​ 150-க்கு ஏலம் போனது.​ இது கடந்த ஆண்டு விலையை விட 12.4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+