இந்திய கறுப்பு பணம்: கணக்கெடுக்க மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இத்தகவலுக்கு ஆதாரப்பூர்வமான கணக்கீடுகள் ஏதுமில்லை. எனவே இதுதொடர்பாக முழுமையான கணக்கெடுப்பை நடத்த மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை முதலில் கணக்கில் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதற்காக சுவிஸ் உள்ளிட்ட நாடுகளுடனான வரி கணக்குகள் தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதித்துறை ஜாம்பாவான்களைக் கொண்டு இப்பணியை செய்து முடிக்க நிதியமைச்சகம் முடிவுசெய்துள்ளது.












Click it and Unblock the Notifications