கரூரில் ஹெல்மெட் அணியாத போலீஸ் ஏட்டு 'டிரான்ஸ்ஃபர்'!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ஹெல்மெட் போடாத போலீஸ் ஏட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள போலீசார் அனைவரும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கரூர் எஸ்.பி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஏட்டு ரகு என்பவர் கரூரில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் போடாமல் வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த எஸ்.பி. டாக்டர் தினகரன் இது குறித்து போலீஸ் ஏட்டு ரகுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் ஏட்டு முன்னுக்குப்பின் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து ரகுவை உடனே ஆயுதப்படை போலிஸ் பிரிவுக்கு இட மாற்றம் செய்து எஸ்.பி. தினகரன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications