ரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு பல புதிய ரயில்கள்-திட்டங்கள்

ரயில்வே பட்ஜெட்டில் புதிதாக 54 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள்:
மதுரை- மும்பை மார்க்கத்தி்ல புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
சென்னை- கோவை இடையே அதி விரைவு பகல் நேர துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ரயில்தான் தமிழகத்தின் முதல் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோயில்-பெங்களூர் இடையே மதுரை- ஒசூர் வழியாக புதிய வாராந்திர ரயில் அறிமுகப்படுத்தப்படும்.
திருப்பதி- சென்னை இடையே நெல்லூர் வழியாக ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்.
கோவை- பெள்ளாச்சி, திருச்செந்தூர்- நெல்லை பாசஞ்சர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
ஹல்தியா- சென்னை இடையே வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
மதுரை- திருப்பதி இடையே வாரம் 2 முறை எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
அதேபோல, ஹவுரா - புதுச்சேரி இடையே காட்பாடி வழியாக வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும்.
மங்களூர்- திருச்சி இடையே புதிய வாராந்திர ரயில் விடப்படும்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே புதிய பாசஞ்சர் ரயில் தொடங்கப்படும். திருசெந்தூரிலிருந்து மயிலாடுதுறைக்கு திருபுவனம் வழியாக புதிய ரயில் இயக்கப்படும்.
சேலம்-காட்பாடி, கோவை-ஈரோடு இடையே புதிய பாசஞ்சர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
தீர்த்த யாத்திரை ரயில்கள்:
மேலும் பாரத தீர்த்த யாத்திரைக்கென 16 ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதி்ல் 5 ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படவுள்ளன. அவை:
1. மதுரை- கோபர்கான்- மந்த்ராலயம்- சென்னை- மதுரை,
2. மதுரை- ஈரோடு- புனே- உஜ்ஜைன்- வேரவல்- நாசிக்- ஹைதராபாத்- சென்னை- மதுரை,
3. மதுரை- சென்னை- ஜெய்ப்பூர்- டெல்லி- மதுரா- பிருந்தாவன்- அலகாபாத்- வாரணாசி- கயா- சென்னை- மதுரை,
4. மதுரை- வாரணாசி- கயா- பாட்னா- அலகாபாத்- ஹரித்வார்- சண்டீகர்- குருஷேத்ரா- அம்ரிஸ்தர்-டெல்லி- மதுரை,
5. மதுரை- மைசூர்- கோவா- மும்பை- ஒளரங்காபாத்- ஹைதராபாத்- மதுரை
புதிய ரயில் பாதைகள்:
மதுரை- கோட்டயம், மதுரை- தூத்துக்குடி, திண்டுக்கல்- குமுளி, ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ஆகியவற்றின் இடையே புதிய ரயில் பாதைகள் அமைக்கத் திட்டம்.
சேலம்- நாமக்கல்- கரூர், நாகூர்- காரைக்கால் இடையேயான ரயில் பாதைத் திட்டங்கள் 2010-2011ல் நிறைவுபெறும்.
போத்தனூர்- கோவை, வேலூர்- விழுப்புரம் இடையே அமைக்கப்படும் ரயில் பாதை பணிகள் இந்த ஆண்டு நிறைவுபெறும்.
அகலப் பாதை:
திருநெல்வேலி- தென்காசி- திருச்செந்தூர், தென்காசி- விருதுநகர், திண்டுக்கல்- பழனி- பொள்ளாச்சி- பாலக்காடு ஆகிய மீட்டர் கேஜ் பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றப்படும்.
சென்னை புறநகர் புதிய ரயில்கள்:
சென்னையில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை வேளச்சேரி- செயின்ட் தாமஸ் மெளன்ட் இடையே புறநகர்ப் பாதை 2012ல் இணைக்கப்படும்.
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை நவீனப்படுத்தப்படுவதோடு மேலும், புதிய பிரிவு ஒன்றும் தொடங்கப்படும்.
சென்னை சென்ட்ரல்- சூளூர்பேட்டை- சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை- வேளச்சேரி- சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை- திருத்தணி- சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
ரயில்வே மருத்துவப் பரிசோதனை மையம்:
திருச்சி, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய இடங்களில் புறநோயாளிகள் சிகிச்சை மையம் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கப்படவுள்ளது.
பன்முனை வளாகங்கள்:
ஈரோடு, திருத்தணி, நாகர்கோயில், சேலம் ஆகிய இடங்களில் ரயில்வே பன்முனை வளாகங்கள் அமைக்கப்படும்.
அந்தமானிலும் புதிதாக ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தலைநகர் போர்ட்பிளேரில் இருந்து தீவின் வடக்கு முனையில் உள்ள திகில்பூர் வரை இந்தப் பாதை அமைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications