மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்கும் அபாயம்- இரா. செழியன்
சென்னை: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தி ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. இது நீடித்தால், மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அது தூண்டி விட்டு விடும் என்று கூறியுள்ளார் பழம்பெரும் அரசியல் தலைவரும், முன்னாள் எம்.பியுமான இரா.செழியன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஆற்றிய உரை இந்தியில் மட்டும் இடம்பெற்றிருந்தது என்று வெளிவந்த பத்திரிகை செய்தி, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிபா பாட்டீல் ஆற்றிய உரை, உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதலாவது மற்றும் கடைசி பத்தியை மட்டும் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசித்துள்ளார்.
முந்தைய காலகட்டத்திலிருந்தே மொழிப் பிரச்னை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.
இந்தி தெரியாத மக்களுக்காக, மாற்று ஆட்சி மொழியாக ஆங்கிலம் கடைபிடிக்கப்படும் என்று 1959-ல், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும்.
மத்திய அரசு ஏற்கெனவே கடும் போராட்டம் ஒன்றை சந்தித்துள்ளது. இப்போது நாடாளுமன்றத்தில் நிலவும் இந்தி ஆதிக்கம், மீண்டுமொரு போராட்டத்தை தூண்டுவதுபோல் அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications