போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயற்சி: 2 கேரள வாலிபர்கள் கைது
கோவை: போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை கோவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் மோகனன் (52. அதே போன்று பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷாஜகான்(47).
இவர்கள் இருவரும் துபாய் செல்வதற்காக கோவை, பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பு, பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமைப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பரிசோதனை செய்தார். .
அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்த இருவரின் பாஸ்போர்ட் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
மோகனன் சென்னை, எண்ணூர் முகவரியிலும், ஷாஜகான், தஞ்சாவூர் முகவரியிலும் தங்கியிருப்பதாகவும் போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்றிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications