சீனாவிடமிருந்து திபெத் பிரிய விரும்பவில்லை- தலாய் லாமா
வாஷிங்டன்: சீனாவிடமிருந்து பிரிய வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் சீனர்கள், மத சுதந்திரத்தை நசுக்குவதுதான் எங்களுக்குக் கவலை தருகிறது என்று கூறியுள்ளார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தலாய் லாமா இதுகுறித்துக் கூறுகையில், சீனர்கள் மீது நாங்கள் அன்பு நிறைய வைத்திருக்கிறோம். ஆனால் சீனா, தனது தாயகத்தில் நடத்தி வரும் கலாச்சார நசுக்கல் நடவடிக்கைகள் எங்களைக் கவலைப்படுத்துகின்றன. மத சுதந்திரத்தை அவர்கள் மதிக்காத நிலையைக் கடைப்பிடித்து வருவது கவலை தருகிறது.
சீனாவில் உள்ள சில தீவிர கருத்து உடையவர்கள்தான், மத சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள்தான் எங்களுக்கும், சீன அரசுக்கும் இடையே நல்லுறவு ஏற்படாமல் தடுத்து வருகிறார்கள். இவர்களின் கொள்கைகள் மிகவும் எரிச்சலைத் தருகின்றன. இருப்பினும் நாங்கள் சீனர்கள் மீது வைத்துள்ள அன்பு இன்னும் மாறவில்லை.
சீனாவிடமிருந்து நாங்கள் பிரிய விரும்பவே இல்லை. ஏனென்றால் திபெத்தின் தேவைகளுக்கும், வளர்ச்சிக்கும் சீனா அவசியமான ஒன்று. ஒவ்வொரு திபெத்தியரும் தனது தாயகம் நவீனமாக வேண்டும் என்ற ஆசையுடன் உள்ளார். அது சீனாவுடன் இருந்தால்தான் முடியும். இதனால்தான் நாங்கள் சீனாவை விட்டுப் பிரிய விரும்பவில்லை என்றார் தலாய் லாமா.












Click it and Unblock the Notifications