தேசமே பெருமை கொள்கிறது- சச்சினுக்கு கருணாநிதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: குவாலியர் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ள உங்களால் தேசமே பெருமை கொள்கிறது என்று முதல்வர் கருணாநிதி சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் சச்சினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பது கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அனைவருக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாடு உங்களது சாதனையைக் கண்டு பெருமை அடைகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications