அரிசி கடத்தல்காரர்களால் மிரட்டல்- அமைச்சர் வேலுவுக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை: தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரிசிக் கடத்தல்காரர்களால் மிரட்டல் வந்துள்ளதால் இந்தப் பாதுகாப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தரும் பொறுப்பு வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டு தீவிரப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக அமைச்சர்களுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு செல்வது உண்டு. ஆனால் எ.வ. வேலுக்கு கூடுதலாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு செல்கிறார்கள்.
இதை தேர்தல் ஆணையத்திடம் சிலர் புகாராகக் கூறினர். இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறித்து தேர்தல் கமிஷன் கருத்தை கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் தனது பாதுகாப்பு குறித்து வேலு விளக்கம் தந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை 6 மாதம், 1 வருடம் என சிறையில் அடைத்திருக்கிறோம். அது தவிர குண்டர் சட்டத்திலும் அரிசி கடத்தல் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
இதன் காரணமாக வந்த மிரட்டல் தொடர்பாக எனக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு இப்போது கொடுக்கப்பட்டதல்ல, சில மாதங்களுக்கு முன்பே கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு விட்டது. வந்தவாசி இடைத்தேர்தலில் இருந்தே கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications