ரயில்வே பட்ஜெட்: தமிழக தென்மாவட்ட மக்கள் ஏமாற்றம்
நெல்லை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தென்மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் உள்ளிட்ட எவ்வித அறிவிப்பும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாதது உள்ளிட்ட பல அம்சங்கள் பொதுவாக பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஆனால் பட்ஜெட்டில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு குறிப்பிடும்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
செந்தூர் எக்ஸ்பிரசை தினமும் இயக்குவது, நெல்லை-தூத்துக்குடி-சென்னைக்கு கூடுதல் ரயில் சேவை போன்ற நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த பட்ஜெட்டில் கூட நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கும், கபாவிற்கும், செங்கோட்டை-ஈரோடு பயணிகள் ரயில் புதிதாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இம்முறை மெயின் லைனான திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை பாதை போக்குவரத்திற்கு தயாராக இருந்த போதிலும் செந்தூர் எக்ஸ்பிரசை தினமும் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை.
ஒட்டு மொத்ததில் இந்த பட்ஜெட்டில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதியில் உள்ள பயணிகள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications