விலைவாசி: ஏப். 21ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட தமிழக பாஜக முடிவு
நாகர்கோவில்: விலைவாசி உயர்வை கண்டித்து வரும் ஏப் 21ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
'கேரள பிரச்சனையில் வைகோ, ராமதாஸ் கூறும் கருத்துகள் பாஜகவுக்கு ஏற்புடையது அல்ல. முற்றுகை போராட்டம் நடத்துவோம் என கூறுவது மன, இன பிளவை ஏற்படுத்தும் விதமாக அமையும்.
அரசின் பிரச்சனையை அரசு தீர்த்து கொள்ள வேண்டும். அதனை மக்கள் பிரச்சனையாக ஆக்க கூடாது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவும், காங் கட்சியும் இணைந்தே தவறு செய்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. தினம் ஒரு விலை ஏற்றுத்துடன் உள்ளது. இதனை கண்டித்து குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரச்சுரம் வினியோகம் செய்து வருகிறோம்.
ஒருபுறம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை இல்லாமல் விவசாயம் சீரழிந்து கொண்டு இருக்கிறது. மறுபுறம் ஏழை, எளிய மக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு திறமையாக செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. விலைவாசி உயர்வை மத்திய அரசு, மாநில அரசு மாறி மாறி பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன.
இந்த அவல நிலையை தட்டிக்கேட்க அடுத்த கட்டமாக ஒன்றிய, நகர, மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும். வரும் ஏப் 21ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications