வரி-எரிபொருள் விலை உயர்வு: விமான கட்டணங்களும் உயர்கின்றன!

Subscribe to Oneindia Tamil

Flight
டெல்லி: சேவை வரி மற்றும் விமான எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் விமான போக்குவரத்து கட்டணம் உயரும் என தெரிகிறது.

விமானப் போக்குவரத்தில் இதுவரை வெளிநாட்டு முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் கிளாஸ் வருப்பு பயணத்துக்கு மட்டும் சேவை வரி விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் இந்த சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வகுப்பு பயணங்களுக்கும் சேவைவரி செலுத்த வேண்டுயது அவசியாமாகிறது.

இதன்மூலம் சிக்கன வகுப்புக்கான கட்டணத்திலும் 10 சதவீதம் வரை சேவை வரி செலுத்தியாக வேண்டும்.

இதனால், இந்த சுமையை விமான போக்குவரத்து நிறுவனங்கள் கட்டாயம் பயணிகளின் தலையில் தான் கட்டும் என கூறப்படுகிறது.

அதோடு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளால் எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருளுக்கான விலையை கூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரு காரணத்தாலும் விமான போக்குவரத்து கட்டணத்தை நிறுவனங்கள் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தங்களின் கார் விலை உயர்வை உடனடியாக அறிவித்து விட்டன.

ஆனால், விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் கட்டண உயர்வு பற்றி அமைதியாகவே உள்ளன.

பட்ஜெட் அறிக்கையை முழுவதுமாக படித்து பார்த்துவிட்டு, அதன் பின்னர் தான் கட்டண உயர்வு குறித்து அறிவிப்போம் என ஜெட் ஏர்வேஸ் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+