மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

Women Mps
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்கள் 33 சதவீதம் பேர் இடம் பெறுவதை உறுதி செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த சட்ட மசோதா 2008ம் ஆண்டு ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்த இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், அப்படி செய்யாமல் தற்போதைய வடிவத்திலேயே மசோதாவை தாக்கல் செய்ய விடமாட்டோம் என்று இக்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வந்தன.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரிலேயே இம்மசோதா நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+