அரசுப் பள்ளியில் கிறிஸ்தவ பிரார்த்தனை- இந்து முன்னணி எதிர்ப்பால் ரத்து
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் நடக்க இருந்த கிறிஸ்துவ பிரார்த்தனை, இந்து முன்னணி எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி ரகோத்தமன் தலைமையில் விசேஷ ஆலோசனை, இறைச் செய்தி மற்றும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அல்லேலுயா துதியின் சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் சுகுண தாசன், ஸ்டேன்லி செய்திருந்தனர். மேலும், பள்ளியின் நுழைவாயிலில் வரவேற்பு டிஜிட்டல் பேனரும் கட்டப்பட்டது.
தகவல் அறிந்த இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் பிரகாஷ் தலைமையில் திரண்டு வந்த இந்து முன்னணியினர் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பள்ளியில் நடைபெற இருந்த கிறிஸ்துவ விசேஷ பிரார்த்தனை கூட்டத்தை பள்ளி தலமைமை ஆசிரியர் ரத்து செய்தார்.
இதனால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications