உரங்களுக்கான மானியம் குறைப்பு- விலை உயரும்: விவசாயக் கடனுக்கு 2 சதவீத மானியம்

திமுக சார்பில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக உள்ள மு.க.அழகிரியின் கோரிக்கையையும் மீறி மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக எரிச்சலடைய வாய்ப்புள்ளது.
அதேசமயம், விவசாயக் கடனுக்கு 2 சதவீத மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள விவசாயத் துறை சம்பந்தமான முக்கிய அறிவிப்புகள்..
விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும். உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவி நாடப்படும். பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு. விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம் அளிக்கப்படும். 2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும் வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படுகிறது. வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி அளிக்கப்படும். அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன.
ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications