மக்களுக்காக போராடும் ஒரே தலைவன் நான் தான்-ராமதாஸ்!
பென்னாகரம்: தமிழகத்தில் மக்களின் நலனுக்காக போராடும் ஒரே தலைவன் இந்த ராமதாஸ் தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பென்னாகரம் தொகுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார்.
நல்லம் பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தேவர், ஊத்துப்பள்ளம், சுன்மாரிக் கொட்டாய், பாலஜங்கமன அள்ளி, சவளூர், கெங்லாபுரம், பச்சியப்பன் கொட்டாய், மேட்டுக் கொட்டாய், கீழ் கொட்டாவூர், மேல் கொட்டாவூர் போன்ற பல்வேறு கிராமங்களில் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், 'தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காண கடந்த 30 ஆண்டுகளாக நான் அரும்பாடுபட்டு வருகிறேன்.
தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பேராடும் ஒரே தலைவன் இந்த ராமதாஸ் தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள ஆண்கள் குடித்துவிட்டு வீட்டில் பெண்களை அடிப்பதும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதும் தான் பொழுது போக்காக வைத்துள்ளனர். இந்த நிலை மாற நீங்கள் பாமகவை ஆதரிக்க வேண்டும்.
பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. பாமக-வை அனைவரும் ஆதரிக்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications