திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்புக்கு ரூ. 200 கோடி - பிரணாபுக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை: திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ரூ.200 கோடி வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகளுக்கு வரும் 2010-11ம் ஆண்டில் 3,75,000 கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் வங்கியின் மூலம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள வரவேற்கத்தக்கது.
மத்திய அரசின் விவசாயிகளின் கடன் ரத்து, மற்றும் தள்ளுபடி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும், பயிர்க் கடன்களுக்காக கூடுதலாக ஒரு சதவீத வட்டி மானியம் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது போற்றத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சாயத் தொழிலுக்கு தேவையான சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவிட 200 கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது.
வேளாண்மை, கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நல்லதொரு நிதி நிலை அறிக்கையை அளித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications