மாயமான கல்பாக்கம் அணு மின் நிலைய விஞ்ஞானியின் உடல் மீட்பு

Subscribe to Oneindia Tamil

Kalpakkam
சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி அனந்தநாராயணனின் உடல் ரயில்வே தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்பது தெரியவில்லை.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின்நிலையத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் விஞ்ஞானியாக இருந்தவர் அனந்த நாராயணன் (36). மனைவி ருக்மணி, இரு குழந்தைகளுடன் அணு மின் நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த 15ம் தேதி காலை அலுவலகத்திற்குக் கிளம்பினார். ஆனால் இரவு 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ருக்மணி, அனந்த நாராயணனின் அலுவலகத்திற்கு போன் செய்து பார்த்தார். அப்போது, அனந்த நாராயணன் அலுவலகத்திற்கே வரவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தெரிந்தவர் வீடுகளில் விசாரித்துப் பார்த்தார் ருக்மணி. ஆனால் அனந்த நாராயணன் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து சதுரங்கப்பட்டணம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இந்த நிலையில், கூடுவாசேரிக்கும், பொத்தேரிக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒருவர் உடல் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர் மாயமான விஞ்ஞானி அனந்த நாராயணன் என்பது தெரிய வந்துள்ளது.

உடலை அவரது மனைவி ருக்மணியும் அடையாளம் காட்டினார். அனந்த நாராயணன் எப்படி இருந்தார். விபத்தில் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+