காங்.க்கு வெற்றி தேடித் தந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தவாரத்திற்கு பட்ஜெட்டில் 'பூஸ்ட்'!

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும் வரவேற்பைத் தேடித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, இந்தத் திட்டப் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் முக்கியத்துவமான முடிவாக கருதப்படுகிறது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2010-11 பட்ஜெட்டில் திட்ட ஒதுக்கீடாக ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சித் துறைக்கு மட்டும் ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குடிசையில்லாத நகர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளுக்கான மானியமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சிக்கான நிதி மொத்தமாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications