சிறப்பான பட்ஜெட்டைக் கொடுத்து தனது வேலையை சரியாக செய்துள்ளார் பிரணாப் - பிரதமர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது வேலையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சரியாக செய்துள்ளார். சிறப்பான பட்ஜெட்டைக் கொடுத்துள்ளார் என்று பாராட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், பிரணாப் தனது வேலையை தெளிவாக செய்திருக்கிறார். மிகவும் சிறந்த பட்ஜெட் என்றார்.

பண வீக்கத்தை அதிகரிக்கும்- பாஜக

லோக்சபா பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இது பணவீக்கத்தையே அதிகரிக்கும். மேலும் விலைவாசி உயரும். சாமானிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்தப் பலனும் இல்லை என்று கூறினார்.

இடதுசாரி தலைவர்கள் பட்ஜெட் குறித்துக் கூறுகையில், இந்த பட்ஜெட் சாமானிய மக்களுக்கானதல்ல. இந்த பட்ஜெட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்றனர்.

சாமானியர்களுக்கான பட்ஜெட்- ப.சிதம்பரம்

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து..

மத்திய பட்ஜெட்டின் மையப் புள்ளி, சாமானிய மக்களின் நலனாகவே உள்ளது. காவல்துறைக்கு ரூ. 30,000 கோடியை ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.

அதேபோல சமூக நலத் திட்டங்களுக்கும் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் பிரணாப் முகர்ஜி. மக்கள் நலனை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் மிகச் சீரான பட்ஜெட்டாக இது உள்ளது.

பொருளாதார நிலையை மிகவும் சரியாக கணித்து அதற்கேற்றார் போல பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+