இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - வரிச் சலுகைகள் இருக்குமா?

தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படலாம், விலைவாசியைக் குறைக்க உதவும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படலாம் என்ற பொதுவான நம்பிக்கை பட்ஜெட் குறித்து நிலவுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் அதையும் மனதில் கொண்டு, மமதாவின் ரயில்வே பட்ஜெட் போல, பிரணாப்பின் பட்ஜெட்டிலும் சலுகைகள் பெருமளவில் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
உணவு பொருட்களின் பணவீக்கம் 20 சதவீதத்தை தாண்டி இருப்பதால் விலைவாசி விண்ணை தொடுகிறது. அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, 6-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்ததால் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரித்துள்ளது. எனவே, தனி நபர் வருமானவரி உச்சவரம்பு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ரூ.ஒரு லட்சத்து 90 ஆயிரமாகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது. இது அதிகரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
உச்ச வரம்பு தொகை, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் அல்லது ரூ. ஒன்றே முக்கால் லட்சமாக அதிகரிக்கப்படக்கூடும். அதுபோல பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பும் ரூ.10 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம்.
இதுதவிர, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications