சவுதிக்கு மன்மோகன் சிங் பயணம்- ரியாத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் மும்முரம்

பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு வரும் சனிக்கிழமை வரவுள்ளார்.
பிரதமருடன் அவரின் மனைவி குர்சரண் கவுர் மற்றும் ஏராளமான இந்திய தொழில் அதிபர்களும் சவுதி அரேபியாவுக்கு வரவுள்ளனர்.
ரியாத் நகரில், 28ம் தேதி, சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது, இருதரப்பு உறவுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னைகள், தீவிரவாதம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாலஸ்தீனம், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, இந்தியா-சவூதி அரேபியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
தண்டனை பெற்ற குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதற்கான ஏற்பாடு, விஞ்ஞான துறையில்தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இதில், 68 கோடி டாலர் கூட்டு முதலீட்டு நிதியம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது.
வரும் மார்ச் 1ம் தேதி சவுரா கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் உரையாற்றுகிறார். அதே நாளில், ரியாத் நகரில் வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்து பேசுகிறார்.
பிரதமர் மன்மோகன் வருகைக்கான ஏற்பாடுகளில் இங்குள்ள அதிகாரிகள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications