காபூல் ஹோட்டலில் பயங்கர தற்கொலைப் படை தாக்குதல்- 9 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காபூல்: காபூல் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் கட்டிட வளாகத்தில் இன்று காலை பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் 9 இந்தியர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபூல் நகரத்தில் வெள்ளிக்கிழமையான இன்று சற்று பரபரப்பு ஓய்ந்த நிலையில் சாலைகள் காணப்பட்டன. இந்நிலையில் நகரின் மையப்பகுதியில் உள்ல ஹோட்டல் ஒன்றில் மூன்று தற்கொலைப் படையினர் புகுந்தனர்.

அதில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் அப்பகுதியில் இருந்த 15 பேர் பலியானார்கள். ஹோட்டலில் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தங்கியிருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் கணிசமான அளவில் இந்தியர்கள் என்றும், மருத்துவர்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பலியானவர்களில் 9 பேர் இந்தியர்கள் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஹோட்டலில் மேலும் இரண்டு பேர் குண்டுகளை உடலில் கட்டியபடி ஓடிய போது, அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் சுட்டுத்தள்ளினர்.

இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+