மோசமான நிலை முடிந்தது: விலைவாசி குறைகிறது -கூறுகிறார் பவார்
டெல்லி: மோசமான நிலை மாறி விட்டது. இப்போது விலைவாசி குறையத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார் வேளாண்துறை அமைச்சர் சரத் பவார்.
லோக்சபாவில் நேற்று விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்பு இல்லாத விவாதம் நடந்தது. இதற்குப் பதிலளித்து பவார் பேசுகையில், ஏற்கனவே முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் கூறியது போல மோசமான நிலை தற்போது முடிந்து விட்டது. நிலைமை மேம்பட்டுள்ளது.
பருப்பு, சர்க்கரை, காய்கறிகளின் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன. இந்த நிலை நீடிக்கும்.
நிலைமை மேலும் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல நாட்களை நோக்கி நாம் நடக்க ஆரம்பித்திருக்கிறோம் என்றார் பவார்.
ஆனால் பவாரின் இந்த தடாலடி பதிலால் அதிருப்தி அடைந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி ஆகியவை முதலில் வெளியேறின. அவர்களைத் தொடர்ந்து சுஷ்மா சுவராஜ் வெளியேறினார். பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications