கிரானைட் குவாரியில் மண் சரிந்து 30 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிமக்ருதி பகுதியில் தனியார் கிரானைட் குவாரியில் மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்து 30 தொழிலாளர்கள் பலியாயினர்.
நேற்று இரவு 7 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மண் சரிவில் சிக்கிய 30 பேரும் பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து உடல்கள் மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்தக் குவாரி நியூட்ரின் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.












Click it and Unblock the Notifications