ஜெ.வுக்கு சிக்கல்: சொத்துக் குவிப்பு வழக்கில் 45 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதி

இதுகுறித்து தனி கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா பிறப்பித்த உத்தரவில், பிறழ் சாட்சியம் அளித்த 45 சாட்சிகளையும் அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா குறுக்கு விசாரணை செய்யலாம் என அனுமதி அளித்தார்.
1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு மீறிய வகையில், ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துக்களைக் குவித்தார் என்பது அரசுத் தரப்பு வழக்காகும்.
முன்னதாக இந்த வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த 45 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு பெங்களூர் தனி கோர்ட் நீதிபதிக்கு உச்சநீதிமன்றண் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தற்போது மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கிளம்பிச் சென்றார் ஜெ:
இதற்கிடையே, ஓய்வெடுப்பதற்காக ஜெயலலிதா இன்று காலை கொடநாடு கிளம்பிச் சென்றுள்ளார்.
இன்று காலை பத்தரை மணியளவில் தோழி சசிகலாவுடன் கோவைக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்ற ஜெயலலிதா அங்கு 12 மணியளவில் போய்ச் சேர்ந்தார்.
பின்னர் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டுக்குப் பயணமானார்.
பெண்ணாகரததில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கொடநாட்டில் எத்தனை நாட்கள் ஜெயலலிதா தங்கியிருப்பார் என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட நான்கு ஜெயலலிதா கொடநாட்டில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications